வெற்றி மொழி: ரே பிராட்பரி

வெற்றி மொழி: ரே பிராட்பரி
Updated on
1 min read

1920-ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரே பிராட்பரி அமெரிக்க எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர். கற்பனை, அறிவியல், திகில் மற்றும் மர்மம் என பல பாணிகளில் படைப்புகளை அளித்து புகழ்பெற்றவர். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை நகைச்சுவை புத்தகங்களாகவும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளிவந்துள்ளன. கதைகள் மட்டுமின்றி கவிதைகளையும் எழுதியுள்ள பிராட்பரி புலிட்சர், எமி உட்பட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். மிகவும் புகழ்பெற்ற இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

> உங்களது தனிப்பட்ட சொந்த ஆற்றலின் மூலமே, உங்களுக்கான அனைத்தும் உருவாக்கப் படுகின்றது.

> புத்தகங்களுக்கு மரணம் இல்லை, அவை எப்போதும் உயிருடனே இருக்கின்றன.

> முக்கியமான விஷயம் என்னவென்றால், எதன் மீதாவது அன்பு செலுத்த வேண்டும் என்பதே.

> அன்பே எல்லாவற்றிற்குமான பதிலாக உள்ளது. எதைவேண்டுமானாலும் செய்வதற்கான ஒரே காரணமும் அன்பே.

> நூலகங்கள் இல்லாவிட்டால் நமது நிலை என்ன? நமக்கான கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் இரண்டுமே கிடையாது.

> நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயலில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், தொடர்ந்து அதை செய்யவேண்டாம்.

> நூலகமே என் உருவாக்கத்திற்கு காரணம். நூலகத்தில்தான் நான் என்னை கண்டுபிடித்தேன்.

> என்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு.

> புத்தகங்களை எரிப்பதை விட மோசமான குற்றங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று புத்தகங்களை படிக்காமல் இருப்பது.

> எப்படி படிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால், வாழ்க்கையைப் பற்றிய முழுமையான கல்வியை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.

> உங்களின் ஒரு செயல்பாட்டிற்கான திட்டம் உற்சாகமானதாக இல்லையென்றால், கண்டிப்பாக நீங்கள் அதை செயல்படுத்தக்கூடாது.

> உங்கள் செயல்பாட்டினை நிறுத்தினால் மட்டுமே நீங்கள் தோல்வியடைகிறீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in