புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம்
Updated on
2 min read

மின்சாரம் இல்லாமல் நம் வாழ்க்கை இயங்காது என்ற சூழலுக்கு வந்துவிட்டோம். அதிகரிக்கும் மின்சார தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் பயன்பாட்டை எவ்வாறு அதிகரிப்பது என்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 2040-ம் ஆண்டு எந்த ஆற்றல் மூலங்கள் உலகின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்ற ஆய்வை மெக்கன்ஸி நிறுவனம் நடத்தியுள்ளது.

தற்போது நிலக்கரி 41 சதவீதம் மின்சார தேவையை பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஆய்வின் படி 2040-ம் நிலக்கரி மூலம் 31 சதவீத மின்சாரத்தை மட்டுமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்தான் மிகப்பெரிய அளவில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவற்றை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளோடு ஒப்பிடும் போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் பற்றிய சில தகவல்கள்….

முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள்

> காற்றாலை ஆற்றல்

> சூரிய ஆற்றல் ஆற்றல்

> ஹைட்ரோபவர் ஆற்றல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in