Published : 04 Jul 2016 10:19 AM
Last Updated : 04 Jul 2016 10:19 AM

வெற்றி மொழி: டேல் கார்னெகி

1888 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த டேல் கார்னெகி நன்கு அறியப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் மற்றும் விரிவுரையாளர். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவரது புத்தகங்கள் வர்த்தக ரீதியாக பிரபலமானவை. நிறுவன பயிற்சி திட்டங்களின் முன்னோடியான இவர், சுய முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட திறமைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான படைப்புகளை உருவாக்கியுள்ளார். விற்பனையில் பெரும் சாதனை படைத்த பல புகழ்பெற்ற நூல்கள் இவரது படைப்புகளில் அடங்கும். இவரது மதிப்புமிக்க ஆலோசனைகள் பிரபலமான பலரின் வெற்றிக்கு உத்வேகம் அளித்துள்ளது.

வெற்றிகரமான மனிதன் தனது தவறுகளிலிருந்து ஆதாயமடைகிறான் மற்றும் மாறுபட்ட வழியில் மீண்டும் முயற்சி செய்கிறான்.

பயத்தை நீங்கள் தோற்கடிக்க வேண்டுமென்றால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். வெளியில் சென்று செயல்படுங்கள்.

தோல்விகளிலிருந்து வெற்றியை உருவாக்குங்கள். ஊக்கமின்மை மற்றும் தோல்வி ஆகியன வெற்றிக்கான இரண்டு உறுதியான படிக்கற்கள்.

செய்ய அஞ்சுகிற செயலை தொடர்ந்து செய்யுங்கள். அதுவே எப்போதும் பயத்தை கைப்பற்றுவதற்கான வேகமான மற்றும் எளிய வழி.

என்ன மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை உங்களிடம் முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு அதை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள். பின்னர் அதை மேம்படுத்த செயல்படுங்கள்.

சிறிய பணிகளை நன்றாக செய்தால், பெரிய பணிகள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ள முனையும்.

பெரும்பாலும் உலகின் சிறந்த பணிகள் இயலாமைகளுக்கு எதிராகவே செய்து முடிக்கப் பட்டுள்ளன.

மகிழ்ச்சி என்பது எந்த வெளிப்புற நிலைமைகளையும் சார்ந்ததல்ல. அது நமது மனதின் அணுகுமுறையால் ஆளப்படுகிறது.

செயலின்மை, சந்தேகம் மற்றும் அச்சத்தை தரும்; செயல்பாடு, நம்பிக்கை மற்றும் தைரியத்தை தரும்.

நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை விரும்பாதவரை உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.

வாக்குவாதத்தில் சிறந்ததைப் பெறுவதற்கான ஒரே வழி, அதைத் தவிர்ப்பதே.

மனதை தவிர பயம் வேறு எங்கும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x