

1913 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த வின்ஸ் லம்பார்டி என்னும் வின்சென்ட் தாமஸ் லம்பார்டி அமெரிக்க கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர். தனது திறமையான பயிற்சியினால், 1960களில் க்ரீன் பே பாக்கர்ஸின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது பல சாம்பியன்ஷிப்களை வசப்படுத்தியவர். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்புமிக்க பயிற்சியாளராக பலராலும் கருதப்படுகிறார். இவரின் வாழ்க்கை மட்டுமின்றி இவரது தத்துவங்கள் மற்றும் வெற்றிக்கான அணுகுமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய இவரைப்பற்றிய புத்தகங்கள் இன்றும் சிறந்த விற்பனையாளர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. இவரை கௌரவிக்கும் விதமாக தேசிய கால்பந்து லீக்கின் சூப்பர் பவுல் கோப்பைக்கு இவரது பெயரிடப்பட்டது.
* கடின உழைப்பு மற்றும் செயல்பாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவையே வெற்றிக்கான விலையாக இருக்கின்றது.
* வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே ஓடுகிறோமே தவிர, வெறுமனே பந்தயத்தில் பங்குபெறுவதற்காக அல்ல.
* வெற்றி என்பது சில நேரத்திற்கான விஷயம் அல்ல; அது எல்லா நேரத்திற்கான விஷயம்.
* நம்மிடம் உள்ளதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதே நாம் யார் என்பதற்கான அளவீடு.
* சாத்தியமற்றவை என்று நாம் நினைக்காமல் இருந்தால், இன்னும் பல விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும்.
* வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை, தோல்வியை ஏற்றுக்கொள்பவர்கள் ஒருபோதும் வெற்றிபெறுவதில்லை.
* ஒரு நிறுவனத்தின் சாதனைகள் ஒவ்வொரு தனிப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவுகள்.
* தலைவர்கள் பிறப்பதில்லை, அவர்கள் கடுமையான முயற்சியினால் உருவாக்கப்படுகிறார்கள்.
* எதையும் சாதிக்க கடின உழைப்பு உங்களுக்கு உதவி செய்யும்.
* வெற்றியாளருக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பலமின்மையோ அறிவின்மையோ அல்ல, அது முயற்சியின்மையே.