கெரசின் பயன்பாட்டை நீக்குவது சாத்தியமா?

கெரசின் பயன்பாட்டை நீக்குவது சாத்தியமா?
Updated on
2 min read

கெரசின் எனப்படும் மண் ணெண்ணெய் உபயோ கத்தை முற்றிலுமாக நீக்கி விட்டதாக சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. மேலும் சில மாநிலங்கள் இந்தப் பட்டியலில் சேர உள்ளதாக சமீபத்தில் நிதித்துறைச் செயலர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார்.

வெளிச்சந்தையில் கெரசின் விற்கப்படுவதில்லை. பொது விநியோக முறை மூலமே கெரசின் விற்கப் படுகிறது. கிராமப் பகுதிகளில் சமையலுக்கும் மின் விநியோகம் இல்லாத பகுதிகளில் விளக்கு எரிக்கவும் கெரசின் பயன்படுத்தப் படுகிறது. ஹரியாணா மாநிலம் முழுமையாக கெரசின் உபயோகம் இல்லாத மாநிலமாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் பஞ்சாப் மாநிலம் விரைவில் சேர உள்ளது.

கெரசின் உபயோகம் குறையக் குறைய அரசின் மானியச் சுமை குறையும். இதனால் கெரசின் உபயோகத்தைக் குறைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கெரசின் உபயோகத்தைக் குறைக் கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊக்கச் சலுகை அறிவித்து வரு கிறது. இந்த ஊக்கத் தொகையை ஜார்க்கண்ட், பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் பெற்றுள்ளன.

கெரசின் உபயோகத்தை குறைக் கும் மாநிலங்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 75 சதவீதமும், மூன்றாம் ஆண்டில் 50 சதவீதமும், நான்காம் ஆண்டில் 25 சதவீத ஊக்கத் தொகையும் அளிக்கப்படும். 2015-16-ம் நிதி ஆண்டில் மட்டும் 85 லட்சம் கிலோ லிட்டர் கெரசின் பொது விநியோக முறை மூலம் அளிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் கெரசின் அளிக்கப்படுவதை படிப்படியாக விலக்கிக் கொள்ள அரசு முடிவெடுத்து அதன் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. வெளிச்சந்தையில் கெரசின் விற்பனை செய்ய 6,600 டீலர்கள் உள்ளனர். கெரசின் உபயோகம் குறையக் குறைய இவர்கள் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே கெரசின் சப்ளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் மூலம் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண் டரை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமையலுக்கு கெரசினை பயன் படுத்தும் மக்களுக்கு இத்தகைய சிலிண்டரை சப்ளை செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ரூ. 1,600 மானியத்துடன் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 5 கோடி வீடுகளுக்கு இவ்விதம் இணைப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டு இதுவரையில் 1.66 கோடி வீடுகளுக்கு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கெரசினுக்கு அளிக்கப்படும் மானிய சுமையைக் குறைக்கவும், பெட்ரோலுடன் கலப்படம் செய்து விற்பனையாவதைத் தடுக்கவும் மத் திய அரசு கெரசின் உபயோகத்தைக் குறைக்கவும், மானியத்தை விலக்கிக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் எல்பிஜி விநியோகம் சென்றடையாத கிராமங்கள், மின் இணைப்பு வசதி இல்லாத கிராமங் கள் இன்னமும் உள்ளன. இந்நிலை யில் கெரசின் பயன்பாட்டை முற்றிலு மாக தவிர்ப்பது சாத்தியமா?

கெரசின் டீலர்களை 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் விற்பனையாள ராக மாற்றுவதன் மூலம் அவர் களுக்கு வாழ்வளிக்க மத்திய அரசு முயல்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் சிலிண்டரை வாங்கும் அளவுக்கு வசதி இல்லாத ஏழை மக்களைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. கெரசின் உபயோ கத்தை நீக்குவதில் தீவிரம் காட்டும் அரசு, ஏழை மக்களின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in