

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு என்பது மிக முக்கியம். சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி, துறைமுக வசதி, மின்சாரம், தண்ணீர் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக இருந்தால்தான் தொழில்புரிவதற்கு எளிதாக இருக்கும். அந்நிய முதலீடும் அதிகமாக வரும். ஆசியாவில் உள்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. ஆசியாவின் மிகச் சிறிய பொருளாதாரத்தை கொண்ட நாடான வியட்நாம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்த ஜிடிபியில் 6.8 சதவீதத்தை உள்கட்டமைப்புக்கு சீனா செலவிடுகிறது.
மொத்த ஜிடிபியில் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதி (சதவீதத்தில்)
1. சீனா - 6.8 %
2. வியட்நாம்- 5.7 %
3. இந்தியா- 5.4 %
4. இந்தோனேசியா- 2.6 %
5. மியான்மர்- 2.5 %
6. சிங்கப்பூர்- 2.3 %
7. பிலிப்பைன்ஸ்- 2.1%
8. மலேசியா- 1.9 %
9. தாய்லாந்து- 1.7%