

சொகுசுக் கார் தயாரிப்பில் முன் னணியில் உள்ள ஃபோக்ஸ் வேகன், இந்தியாவைப் பொறுத்தமட்டில் எஸ்யுவி மாடல்களில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அதிகரித்துவரும் இந்த சந்தையில் தங்களுக்கென தனி இடத்தைப் பிடிக்க தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
எஸ்யுவி-க்களில் பிரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்த இந்நிறுவனம் இந்த ஆண்டு இந்தக் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
`டிகுயான்’ என பெயர் சூட்டப்பட் டுள்ள இந்த எஸ்யுவி மாடல்கார், ஃபோக்ஸ்வேகனின் விற்பனையை அதிகரிக்க உதவும் என உறுதியாக நம்புகிறது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ-வை தொடர்ந்து இந்த காரை சமீபத்தில் அதன் இணையதளத்தில் காட்சிப் படுத்தியிருந்தது ஃபோக்ஸ்வேகன்.
இந்தக் கார் 4,486 மி.மீ. நீளமும், 1,839 மி.மீ அகலமும், 2,095 மி.மீ. உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட் டுள்ளது. இதன் சக்கரங்கள் 2,677 மி.மீ. விட்டம் உடையவை.
ஃபோர்டு நிறுவனத்தின் எண்டவர் (நீளம்: 4,892 மி.மீ, அகலம் 1,860, உயரம் 1,837 மி.மீ. சக்கரத்தின் விட்டம் 2,850 மி.மீ), டொயோடா பார்சூனர் (நீளம்: 4,795 மி.மீ., அகலம் 1,855 மி.மீ., உயரம் 1,835 மி.மீ. சக்கரத்தின் விட்டம் 2,745 மி.மீ), ஹூண்டாய் சான்டா எப்இ (நீளம்: 4,690 மி.மீ. அகலம் 1,880 மி.மீ., உயரம் 1,690 மி.மீ, சக்கரத்தின் விட்டம் 2,700 மி.மீ)
இது 2 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. இதில் 7 கியர்கள் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கார் 177 ஹெச்பி திறனுடன் 350 நியூட்டன் மீட்டர் சக்தியை வெளிப்படுத்தக் கூடியது.
இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டதாக இது இருக்கும்.
இந்த கார் மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஃபோக்ஸ் வேகன் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக ஜீப்களில் உள்ளதைப் போன்று நான்கு சக்கரங்களிலும் சுழற்சி தன்மை உடையதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஹூண்டாய் டக்ஸன் மற்றும் ஜீப் கம்பாஸ் மற்றும் ஹோண்டா சிஆர்-வி ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த மட்டில் 7 ஏர் பேக் இருப்பதால் பயணம் பாதுகாப்பாக அமையும். முன்புற அவசரகால பிரேக் சிஸ்டம், நடைபாதை வாசிகள் கண்காணிப்பு, மோதல் தவிர்ப்பு பிரேக் வசதி, பாதை உணர்த்தும் வசதி உள்ளிட்ட பல இதன் சிறப்பம்சங்களாகும்.
மிக அழகிய வடிவமைப்பு, கண்கவர் உள்பகுதி, சொகுசான பயணம் ஆகியன டிகுயான் அளிக்கும் உத்தரவாதமாகும். போட்டி நிறுவனங்கள் அளிக்காத சொகுசான பயணத்தை அளிக்க இதன் சஸ்பென்ஷன் மிகவும் உறுதுணையாக உள்ளது. சாலை வழிப் பயணம் மற்றும் சாகச பயணத்துக்கும் ஏற்றதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விற் பனைக்கு வருவதற்கு முன்பே இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
டிகுயானை ஓரிரு மாதங்களில் அறி முகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் திட்ட மிட்டுள்ளது. இது ரூ. 22 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையான விலையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.