

டயர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மிச்சிலின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெகிக்கிள்ஸ் எனப்படும் எஸ்யுவி-க்களுக்கான சிறப்பு டயர்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. மிச்சிலின் எல்டிஎக்ஸ் போர்ஸ் என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.
சாலைப் பயணம் மற்றும் சாகசப் பயணம் உள்ளிட்ட அனைத்து வகையான பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படும் எஸ்யுவி-க்களுக்கு இது மிகவும் ஏற்றது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாகசப் பயணம், மலையேற்றப் பயணம் உள்ளிட்டவற்றுக்கு டயர்கள் மிகவும் பிடிப்பு மிக்கதாக இருப்பது அவசியம். அத்தகைய பிடிப்பை இந்த டயர்கள் அளிக்கும். இதனால் மலைப் பாதைகளில் இது மிகச் சர்வசாதாரணமாக பயணிக்கும்.
இந்தியாவில் எஸ்யுவி கார்களின் புழக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு புதிய ரக டயரை அறிமுகப்படுத்தியிருப்பதாக நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த டயர் தயாரிப்பில் காம்பாக்ட் டிரெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக பிடிப்புத் தன்மை மற்றும் நீடித்து உழைக்கக் கூடியது. நம்பகமானது. வழுக்கும் தன்மை கொண்ட சாலைகளில் கூட இத்தகைய டயர் பொறுத்தப்பட்ட எஸ்யுவி-க்கள் பிரேக் பிடிக்கும்போது வழக்கமான டயர்களை விட சிறப்பாக செயல்படுவது சோதனையில் கண்டறியப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.