

அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகை ஆளப்போவதற்கான சமிக்கைகள் தெரிய ஆரம்பித்துள்ளன. முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள் செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால் கடந்த வாரம் வந்த செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவுதான் கண்டுபிடிப்புகள் வந்தாலும் மனிதனை போல் சிந்திக்கும் திறன் கொண்ட ரோபோவை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதா வது சில கட்டளைகளை மட்டும் செய்யும்படி மட்டுமே இதுவரை ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்ட தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இது மிகப் பெரிய தடையாக இருந்து வந்தது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் பிரிவான டீப்மைண்ட் ஆராய்ச்சிக் குழு இதை நிவர்த்தி செய்வதற்கு புதிய புரோகிராமை கண்டுபிடித்துள்ளது. அதாவது மனிதனை போல் கற்றுக்கொள்வதற்கும் பலதரப்பட்ட வேலைகளை செய்வதற்கும் டீப்மைண்ட் புரோகிராமை உரு வாக்கியுள்ளது.
பொதுவாக செயற்கை நுண்ணறிவு திறன் இயந்திரங்கள் பல்வேறு நியூரல் நெட்வொர்க் புரோகிராம்கள் மூலம் செயல்படுத்தப் படுகின்றன. இவற்றுக்கு எப்படி செயல்பாடுகளை கற்றுக் கொள்வது அதை செயல்படுத்துவது போன்ற வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு செஸ் விளை யாட்டை செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரத்தால் விளையாடும்போது மனிதனை விட சிறப்பாக விளையாடும். ஆனால் அடுத்த முறை விளையாடும் போது முந்தைய விளையாட்டில் எப்படி காய்களை நகர்த்தினோம் என்பதை மறந்துவிடும். மேலும் முந்தைய அனுபவங்களை புதிய போட்டியில் செயல்படுத்தாது. அதுமட்டுமல்லாது அதிகமான இந்த குறைபாடு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிகப் பெரிய தடையாக இருந்தன.
மனிதர்களும் விலங்கினங்கள் மட்டுமே முந்தைய செயல்பாடுகளை மூளையில் சேமித்து வைத்துக் கொள்ளும். மேலும் புதிய செயல் களை எதிர்கொள்ளும் போது முந் தைய செயல்பாடுகளை ஞாபகத் தில் வைத்து செயல்படும். நியூரல் சயின்ஸ் என்று சொல்லக்கூடிய இப்பிரிவில்தான் டீப்மைண்ட் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வந் தார்கள். ஒரு செயல்பாட்டிலிருந்து அடுத்த செயல்பாட்டுக்கு செல்லும் போது முந்தைய செயல்பாட்டை பற்றிய நினைவுகளை சேமித்து வைக்குமாறு புரோகிராம் இந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டது.
செயற்கை நுண்ணறிவு புரோ கிராம் கொண்ட இயந்திரங்களை அட்டாரி என்ற கணினி விளை யாட்டில் சோதனைக்கு ஈடுபடுத்தி னார்கள். பிரேகவுட், ஸ்பேஸ் இன்வேடர்ஸ், டிபெண்டர் என பல்வேறு பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை பயன்படுத்தினர். மனிதர்களை விட இந்த விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் அதிக புள்ளிகளை எடுத்தது. அதுமட்டு மல்லாமல் புதிய உத்திகளையும் பயன்படுத்தியது. பழைய நினைவு களில் இருந்து கற்றுக்கொண்டதை புதிய செயல்பாட்டில் பயன்படுத்து வதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் மனிதனின் பொது மூளை செயல்பாடு அளவுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு இயந்திரங் கள் விரைவாக செயல்படவில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ``நாங்கள் தொடர்ச்சியாக செயல் பாடுகளை கற்றுக் கொள்ளும் வகையில்தான் புரோகிராமை வடிவமைத்துள்ளோம். இதனால் சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் காண்பிக்க முடியாது’’ என்று டீப்மைண்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் கிர்க்பாட்ரிக் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. மனித மூளை கொண்ட கூகுளின் புதிய மனிதன் பூமியில் காலடி எடுத்து வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.