இது புதிசு: நிறம் மாறும் கேக் | ஸ்மார்ட் டிவி | மீண்டும் பறக்கும் ராக்கெட்

இது புதிசு: நிறம் மாறும் கேக் | ஸ்மார்ட் டிவி | மீண்டும் பறக்கும் ராக்கெட்
Updated on
1 min read

நிறம் மாறும் கேக்

அமெரிக்காவில் உள்ள ஒரு பேக்கரி நிறம் மாறும் கேக்கைத் தயாரித்துள்ளது. இதன் மேல்பாகத்தில் மிக நுட்பமாக வண்ணங்களை சேர்த்துள்ளதால் இடது வலது திருப்பும்போது வண்ணம் மாற்றம் தெரிகிறது. இதன் வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

***

ஸ்மார்ட் டிவி

சாம்சங் நிறுவனம் 2016-டிவி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் திங்க் என அறிமுகப்படுத்தியுள்ளது. டிவியில் உள்ள சென்சார்கள் மூலம் வீட்டின் கதவையும் திறந்து மூட முடியும். இதை ஸ்மார்ட்போன் மூலமும் இயக்கலாம்.

***

மீண்டும் பறக்கும் ராக்கெட்

எலன் மஸ்க் நிறுவனராகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய பால்கான் 9 (Falcon 9) ராக்கெட் எந்த சேதமும் இல்லாமல் பூமிக்கு திரும்பியுள்ளது. இது மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் தகுதியோடு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in