

கி.மு 106 கி.மு 43 காலத்தை சேர்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ ரோம தத்துவஞானி ஆவார். அரசியலறிஞர், சொற்பொழிவாளர், மொழியியலாளர், அரசியல் கோட்பாட்டாளர், அரசியலமைப்பாளர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் விமர்சகர் போன்ற பன்முகங்கள் கொண்டவர். லத்தீன் மொழி மட்டுமின்றி ஏனைய ஐரோப்பிய மொழிகளின் மீதான இவரது செல்வாக்கு மிகவும் உயர்வானது. ரோமானிய வரலாறு மற்றும் ஐரோப்பிய பண்பாட்டில் இவரது படைப்புகள் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பண்டைய ரோமின் மிகச்சிறந்த பேச்சாளர்கள் மற்றும் உரை நடையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.
* உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது.
* நினைவுத்திறனே அனைத்து விஷயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது.
* நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது.
* ஒன்றை நினைப்பதற்கு நாம் வெட்கப்படவில்லை என்றால், அதைச் சொல்வதற்கும் நாம் வெட்கப்படக்கூடாது.
* எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
* நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது.
* துடுக்குத்தனம் இளமைக்குச் சொந்தமானது; மதிநுட்பம் முதுமைக்குச் சொந்தமானது.
* மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
* உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி.
* நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது.
* தொடங்குவதற்கு முன்னாள் கவனமாக திட்டமிட வேண்டும்.
* கவுரவம் என்பது நற்பண்பிற்கான வெகுமதி ஆகும்.
* போர் நேரத்தில் சட்டங்கள் மௌனம் சாதிக்கின்றன.
* மரியாதை இல்லாத திறமை பயனற்றது.
* புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.