

இந்தியாவில் குடிதண்ணீர் சுத்தி கரிப்பான் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள கென்ட் நிறுவனம் தற்போது கார் சுத்திகரிப்பான் கருவியைத் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
``கென்ட் மேஜிக்’’ என்ற பெயரில் வந்துள்ள இந்த சுத்திகரிப்பானின் விலை ரூ. 7,999 ஆகும். இது காரில் உள்ள தூசு, ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயன கலவைகள், வைரஸ்கள், கெட்ட நெடி மற்றும் பிற காற்று மாசுகளை நீக்கிவிடக் கூடியது.
கார் பயணத்தின்போது ஆரோக்கியமான காற்று அவசியம். அதைக் கருத்தில் கொண்டு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மகேஷ் குப்தா தெரிவித்தார். பொதுவாக கார் வைத்திருப்பவர்கள் நகரத்தின் வாகன நெரிசலில் சிக்கி தினசரி 5 மணி நேரம் வரை காரில் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. புற மாசு மற்றும் வாகன நெரிசலால் ஏற்படும் புகை ஆகியவற்றிலிருந்து காரில் பயணிப்பவர்களைக் காப்பாற்றும் நோக்கில் இந்தக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹெச்பிஇஏ எனப்படும் தூசு சேகரிக்கும் தொழில்நுட்பம் ஜப்பானிலிருந்து பெறப்பட்டு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் கூடுதலாக கார்பன் ஃபில்டர் உள்ளதால் கெட்ட நெடி பரவுவதைத் தடுக்கும். காரில் உள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் வாயுவை நீக்கி 99 சதவீதம் சுத்தமான காற்று கிடைக்க வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வோல்ட் கார் சார்ஜர் சாக்கெட்டில் இணைத் தால் போதுமானது. இது ஓசையின்றி செயல்படக் கூடியது.