

கூகுள் நிறுவனம் `அலோ’ என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதை கூகுள் கணக்குடன் இணைத்துக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தாவும் ரோபோ
இனி ரோபோட்டுகளின் யுகம் என்பதற்கு சான்றாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது பென்சின்வேனியா பல்கலைக்கழக மாணவர்கள் புதிய ரோபோவை வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ தாவுகிறது, ஓடுகிறது. 1.3 அடி அகலமுடைய இந்த ரோபோ நம் வீட்டின் கதவுகளைத் திறக்கிறது. சிறிய நாய் போல் தோற்றமளிக்கும் இந்த ரோபோ 4.5 எம்பிஹெச் வேகத்தில் ஓடுகிறது. 5 கிலோகிராம் எடையுள்ள இந்த ரோபோ 1.5 அடி உயரத்தில் பறந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பனோரமா 360
அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பனோரமா வகையில் படம் எடுக்கக்கூடிய வசதி உள்ளது. 360 டிகிரியில் சுழன்று படம் எடுக்கக்கூடிய வகையில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியில் நமது ஸ்மாட்போனை இணைத்துக்கொள்ள வேண்டும்.
சாவி சார்ஜர்
ஸ்மார்ட்போனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிருப்பதால் சார்ஜரை எப்போதும் வைத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது நமது வண்டி சாவியிலேயே இணைத்துக் கொள்ளும்படி மிகச் சிறிய சார்ஜர் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
சோலார் கார்
சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் வாகனங்களும் தற்போது அதிக அளவில் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சோனா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தற்போது புதிய சோலார் காரை வடிவமைத்துள்ளது. இந்தக் காரை ஒருதரம் சார்ஜ் செய்தால் 185 கி.மீ. செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி தகடுகள் காரின் முன்பகுதி, பின்பகுதி, மேல்புறத்தில் என அனைத்து பக்கங்களிலும் இருக்கிறது. ஒரு தரம் சார்ஜ் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 30 நிமிடம்.