

இந்த வருடம் பட்ஜெட்டை விட அதிகம் பேசப்பட்டது 2016-17-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கைதான். மிக விரிவாகவும் புள்ளி விவரங்களோடும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அனைத்து தரப்பினரும் பாராட்டினர். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனுக்கு பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பணமதிப்பு நீக்கத்தால் என்ன விளைவு ஏற்பட்டது எந்தெந்த துறைகள் பாதிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் எவ்வளவு மக்களை சென்றடைந்துள்ளது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படியும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார மேதை கீன்ஸ், மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர் உள்ளிடவர்களின் அறிய கருத்துகளை கூறி விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆய்வறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் சில….