

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், பண்டிகை காலத்தை உத்தேசித்து புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் சிஎல்ஏ 200 அர்பன் ஸ்போர்ட் மாடல் காரின் விலை ரூ. 35.99 லட்சமாகும். ஸ்பெஷல் எடிஷன் என்ற வகையில் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் வெளிவந்துள்ளது.
காஸ்மோஸ் பிளாக் எனும் பிரத்யேக நிறத்தில் வந்துள்ள இந்த கார் 184 ஹெச்பி பெட்ரோல் மற்றும் 136 ஹெச்பி டீசல் என்ஜினைக் கொண்டது. பெட்ரோல் மாடலைக் காட்டிலும் டீசல் மாடல் ஒரு லட்சம் விலை அதிகமாகும். அதாவது டீசல் மாடல் சிஎல்ஏ 200 டி அர்பன் ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 36.99 லட்சமாகும்.