

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டுகாடி நிறுவனம் ரேஸ் பிரியர்களுக்கென 959 பனிகேல் கோர்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பந்தயத்துக்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள் விலை ரூ. 16 லட்சம் வரை இருக்கும். முன்பதிவுத் தொகை ரூ. 2 லட்சம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டுகாடி சர்வதேச பிரீமியர் கண்காட்சி அரங்கில் 959 பனிகேல் கோர்ஸ் மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். வாகனத்தின் எடை 226 கிலோவாகும். எடையைக் குறைப்பதற்காக லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 955 சிசி திறன் கொண்ட இன்ஜின் 10,500 ஆர்பிஎம் மற்றும் 150 ஹெச்பி மற்றும் 102 நியூட்டன் மீட்டர் திறனை வெளிப்படுத்தக் கூடியது.
கவாஸகி நின்ஜா இஸட் எக்ஸ்-10ஆர், ஹோண்டா சிபிஆர் 1000ஆர் ஆகியவற்றுக்குப் போட்டியாக டுகாடி இருக்கும்.