

1947-ம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் கிங் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான எழுத்தாளர். திகில், புதிர், அறிவியல் மற்றும் கற்பனை வடிவங்கள் நிறைந்த புதினங்களை எழுதுவதில் சிறந்தவர். இவரது நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் 350 மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிங்கின் பல படைப்புகளைத் தழுவி திரைப்படங்கள், குறுந்தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வெளிவந்துள்ளன. இவருடைய படைப்புகள் 33 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 35க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க திகில் கதை எழுத்தாளர்களில் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
# டேபிள் உப்பை விட திறமை மலிவானது. அதிகப்படியான கடின உழைப்பே வெற்றிகரமான ஒருவரிடமிருந்து திறமையானவரை பிரித்துக் காட்டுகிறது.
# வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது. விரைவிலோ அல்லது பின்னரோ, நீங்கள் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் சுற்றி வந்துவிடும்.
# படிப்பதற்கு உங்களுக்கு நேரம் இல்லை என்றால், நீங்கள் எழுதுவதற்கு நேரமோ அல்லது கருவிகளோ இருக்கப்போவதில்லை.
# நல்லவற்றைக் காட்டிலும் கெட்ட புத்தகங்கள் பெரும்பாலும் கற்பிப்பது அதிகம்.
# உங்கள் மனநிலையை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால், உங்கள் மனநிலை உங்களைக் கட்டுப்படுத்தும்.
# நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற வேலைக்கு நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டும்.
# ஒரு நபரால் ஒரே நேரத்தில் அனைத்தை யும் மாற்ற முடியாது.
# நல்ல புத்தகங்கள் அதன் அனைத்து ரகசியங்களையும் ஒரே நேரத்தில் கொடுத்துவிடாது.
# நீங்கள் கையிலெடுக்கும் ஒவ்வொரு புத்தகமும் அதற்கான தனிப்பட்ட பாடம் அல்லது பாடங்களைக் கொண்டுள்ளது.
# மிகவும் முக்கியமான விஷயங்கள் சொல்வதற்கு கடினமான விஷயங்களாகவே உள்ளன.
# அப்பாவியின் நம்பிக்கையே பொய்யனுக்கான மிகவும் பயனுள்ள ஆயுதமாகும்.