வெற்றி மொழி: டான் மிகுவல் ரூயிஸ்

வெற்றி மொழி: டான் மிகுவல் ரூயிஸ்
Updated on
1 min read

1952-ம் ஆண்டு பிறந்த டான் மிகுவல் ரூயிஸ் மெக்சிகன் எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர். தனது எளிய ஆழ்ந்த போதனைகளின் மூலமாக உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்.

இவரது பிரபலமான புத்தகமான “தி ஃபோர் அக்ரீமென்ட்ஸ்” மில்லியன் கணக்கில் விற்பனையானதோடு, நாற்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.

ஆன்மீக செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவராகவும், உலகம் முழுவதும் மதிக்கப்படுபவராகவும் விளங்கு வதோடு பல்வேறு அங்கீகாரங்களையும் கவுரவ பட்டங்களையும் பெற்றுள்ளார்.

# உங்கள் வார்த்தைகளில் அப்பழுக்கற்றவராக நடந்துகொள்ளுங்கள்.

# எந்த சூழ்நிலையிலும், உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள்.

# ஒவ்வொரு மனிதனும் ஒரு கலைஞன்.

# ஒருபோதும் ஊகங்களை மேற்கொள்ளாதீர்கள்.

# கேள்விகளைக் கேட்கவும், நீங்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தவும் தைரியத்தை தேடுங்கள்.

# உங்களுக்கு எதிராக பேசுவதற்கோ அல்லது மற்றவர்களைப் பற்றிய வதந்திக்கோ வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

# உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

# மோதல் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலானது என்று மக்கள் சொல்ல விரும்புகிறார்கள். உண்மையில் மோதல் உண்மைக்கும் பொய்களுக்கும் இடையிலானது.

# சத்தியத்தையும் அன்பையும் நோக்கி உங்கள் வார்த்தையின் வல்லமையைப் பயன்படுத்துங்கள்.

# வாழ்க்கை மிகவும் எளிமையானது, புரிந்துகொள்ள எளிதானது, ஆனால், நாம் உருவாக்கும் நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளின் மூலமாக அதை சிக்கலாக்குகிறோம்.

# நமது நம்பிக்கை முறையானது ஒரு கண்ணாடியைப் போன்றது, நாம் நம்புவதை மட்டுமே நமக்குக் காட்டுகிறது.

# நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் நாம் மதிக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள அனைவருடனும் நாம் சமாதானமாக இருக்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in