

1928-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை வாழ்ந்த எலீ வீஸல் ருமேனிய நாட்டைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் அரசியல் ஆர்வலர். ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், பாஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தனது அரசியல் நடவடிக்கைகளில் தென்னாப்பிரிக்கா, கொசோவோ, சூடான் போன்ற இடங்களில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரசாரம் செய்துள்ளார். வன்முறை, இனவெறி, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்கான பாதுகாப்பிலும் வலுவாக செயல்பட்டவர். அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள் உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
# நினைவு என்ற ஒன்று இல்லாமல் எந்த கலாசாரமும் இல்லை. நாகரிகம், சமுதாயம் மற்றும் எதிர்காலமும் இருக்காது.
# அநீதியைத் தடுக்க நாம் சக்தியற்றவர்களாக இருக்கும் நேரங்கள் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கத் தவறிய காலம் இருக்கக்கூடாது.
# நட்பு என்பது அன்பை விட ஆழமாக வாழ்க்கையை குறிக்கிறது.
# ஒரு நபருக்கு நன்றியுணர்வு இல்லாதபோது, அவனது மனிதநேயத்தில் ஏதோ ஒன்று காணாமல் போகிறது.
# மதம் என்பது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம்.
# நாம் வாழ்க்கையில் எதை செய்ய முயற்சிக்கிறோம் என்பதைப்பற்றி சுய உணர்வுடன் இருக்க வேண்டும்.
# எப்போது மொழி தோல்வியடைகிறதோ, அப்போது வன்முறை ஒரு மொழியாகிறது.
# நம்பிக்கை சமாதானம் போன்றது. இது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு அல்ல. இது நாம் ஒருவருக்கொருவர் கொடுக்க முடிந்த பரிசு.
# மதம் என்பது கடவுளுடனான மனிதனின் உறவு அல்ல, அது மனிதனுடனான மனிதனின் உறவு.
# உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சொல்லக்கூடிய ஒரே பிரார்த்தனை “நன்றி” என்றால், அது போதுமானதாக இருக்கும்.
# மதம் அதன் நல்ல தருணங்களையும், மோசமான தருணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
# உயர்வானதாக சிந்தியுங்கள், ஆழமாக உணருங்கள்.