

சேமிப்புகளுக்கு மியூச்சுவல் பண்ட்கள் சிறந்த வழி. இவற்றை நமக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் தற்போதைய விதிமுறைகளின்படி அவற் றைப் பரிசளிக்க முடியாது. உங்கள் வங்கி கணக்கில் இருந்து, மனைவியின் பெயரில் மியூச்சுவல் பண்ட் கணக்குக்கு முதலீடு செய்ய முடியாது. மூன்றாம் நபர் முதலீட்டினை மியூச்சுவல் பண்ட்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
அதே போல உங்கள் பெயரில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துவிட்டு, முதிர்வின் போது உங்களது யூனிட்களை நீங்கள் விரும்பும் நபருக்கு மாற்ற முடியாது. ஒரு வேளை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வரும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது கணக்கில் இருக் கும் தொகை அவரது நாமினிக்கு மாற்றப்படும் வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.
உங்களின் நெருக்கமானவர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும் என்றால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து அவர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி, அதன் பிறகு அவர் கள் பெயரில் மியூச்சுவல் பண்ட் முத லீடு தொடங்க வேண்டும். அல்லது நீங்கள் ஒரு மியூச்சுவல் பண்ட் கணக்கு தொடங்கி முதலீடு செய்து, உங்களது மியூச்சுவல் பண்ட் யூனிட்களை விற்று, உங்கள் வங்கிக்கு பணம் கிடைத்த பிறகு உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பணத்தை மாற்ற வேண்டும். ஆனால் இது போல மாற்றும்போது பரிசு வழங்குவதில் எந்தவிதமான அழகியலும் இருக்காது.
இதற்காக சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சில மாற்று வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றன. இப்போதைக்கு ஹெச்டிஎப்சி சில்ட்ரன் கில்ட் பண்ட் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சைல்ட் கேர் பிளான் ஆகிய பண்ட்களை பரிசளிக்க முடியும். சில காலமாகவே இந்த பண்ட்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த பண்ட்களில் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் முதலீடு செய்ய முடியும். இவற்றில் லாக் இன் காலம் உண்டு. 18 ஆண்டு காலம் அல்லது 3 ஆண்டுகள் இதில் எது கடைசியாக நடக்கிறதோ அப்போதுதான் முதலீட்டினை எடுக்க முடியும். குழந்தைகளின் உயர்கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த பண்டின் நோக்கம். அதே போல லாக் இன் காலம் இல்லாத பண்ட்களில் கூட முதலீடு செய்ய முடியும்.
சமீபத்தில் `பந்தன் எஸ்டபிள்யூபி’ என்னும் திட்டத்தை எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் அறிமுகம் செய்திருக்கிறது. இதில் எஸ்பிஐ மியூச்சுவல் பண்டின் அனுமதிக்கப்பட்ட ஏதே னும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த பண்டில் இருந்து நமக்கு விருப்பமானவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செல்வதற்கு ஏற்பாடு செய்ய முடியும். கணவன்/மனைவி, பெற்றோர்கள், குழந்தைகள் (15 வயதுக்கு மேற்பட்டவர்கள்), உடன் பிறந்தவர்கள் என சம்பந்தபட்டவரின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும். அவர்கள் தங்களுடைய மாதாந்திர தேவைகளை இதன் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
முதலீட்டாளரும் அதனை பயன்படுத்துபவர்களும் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் வரி விஷயத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசினை பெறுபவர் வரி செலுத்த வேண்டுமா என்னும் கேள்வி இங்கு எழக்கூடும். வருமான வரி சட்டத்தின்படி உறவினர்களிடம் இருந்து பெறக்கூடிய பரிசுகளுக்கு வருமான வரிவிலக்கு உண்டு. உறவினர்கள் என்பதற்கு சில வரம்புகள் உண்டு. பெற்றோர், கணவன், மனைவி, உடன் பிறந்தவர்கள், கணவன் மனைவியின் உடன் பிறந்தவர்கள், பெற்றோருடன் பிறந்தவர்கள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
தவிர மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கு ஏற்ப மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும். ஒரு கணவர் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்து அந்த தொகையை தன்னு டைய மனைவிக்கு பரிசாக வழங்கும் பட்சத்தில் மூலதன ஆதாய வரியை கணவர் செலுத்தியாக வேண்டும். குழந்தைகளின் பெயரில் முதலீட்டை எடுக்கும் பட்சத்தில், அந்த முதலீட்டை வெளியே எடுக்கும் போது மூலதன வரி செலுத்தியாக வேண்டும்.
இதேபோல `பந்தன் எஸ்டபிள்யுபி’ திட்டத்திலும் முதலீடு செய்பவர்களே வரியையும் செலுத்தியாக வேண்டும். இந்த முதலீட்டை அனுபவிப்பவர் வேறு ஒருவராக இருந்தாலும் கூட நிதி சார்ந்த சொத்தினை யார் உருவாக்குகிறார்களோ அவர்களே வரி செலுத்தியாக வேண்டும் என கிளியர் டாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அர்சித் குப்தா தெரிவித்தார்.