வெற்றி மொழி: அர்னால்டு பென்னெட்

வெற்றி மொழி: அர்னால்டு பென்னெட்
Updated on
1 min read

1861-ம் ஆண்டு முதல் 1931-ம் ஆண்டு வரை வாழ்ந்த அர்னால்டு பென்னெட் இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஆவார். நாவலாசிரியராக பரவலாக அறியப்பட்டாலும் நாடகம், விமர்சனம், பத்திரிகை மற்றும் திரைப்பட துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

முதல் உலகப் போரின்போது, தகவல் தொடர்பு அமைச்சகத்தில் பிரான்சுக்கான பிரச்சார இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நாவல்கள், நாடகங்கள், இசை நாடகம், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். ஆங்கில இலக்கிய உலகின் முன்னணி நபர்களுள் ஒருவராக விளங்கியவர்.

# எந்த ஒரு மாற்றமும், அது சிறந்தது என்றாலும் கூட, எப்போதும் குறைபாடுகள் மற்றும் சிக்கல்களுடனே இருக்கிறது.

# நாம் ஒருபோதும் அதிகப்படியான நேரத்தைப் பெற்றிருப்பதில்லை.

# அடுத்த வாரம் வரை அல்லது நாளை வரை காத்திருக்கும் வகையில் எந்த விஷயமும் நமக்கு வழங்கப்படவில்லை.

# தொடர்ந்து போய்க்கொண்டே இருங்கள்... பயனுள்ள ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்.

# முழு நேர்மையான முயற்சிக்கு பிறகு திருப்தியை பிரதானமாக பெற்றிருப்பதிலேயே மகிழ்ச்சி அடங்கும்.

# நேரத்தை மதிக்கும் உணர்வு நமக்கு வேண்டும்.

# உணர்ச்சி இல்லாமல் அறிவு இருக்க முடியாது.

# கடந்து செல்லும் நேரத்தை மட்டுமே உங்களால் வீணடிக்க முடியும். நாளைய தருணத்தை உங்களால் வீணடிக்க முடியாது; அது உங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

# நீங்கள் பிறந்த தருணத்திலேயே நீங்கள் சாதித்துவிட்டீர்கள்.

# ஒரு தூண்டுதல் சிரமமானதாக இருக்கலாம், ஆனால் அது அற்புதமானது.

# உங்களது சொந்த மனது ஒரு புனிதமான படைப்பாகும், உங்கள் அனுமதி இல்லாமல் இதில் எவ்வித தீமையும் நுழைய முடியாது.

# நேரம் பற்றிய முதன்மையான அழகு என்னவென்றால், உங்களால் முன்கூட்டியே அதனை வீணாக்க முடியாது.

# மோசமான சுவையை விட நல்ல சுவை சிறந்தது, ஆனால் சுவையே இல்லாததை விட மோசமான சுவை சிறந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in