புதிய தலைமுறை ஸ்கார்பியோ

புதிய தலைமுறை ஸ்கார்பியோ
Updated on
1 min read

எஸ்யுவி, எம்பிவி பிரிவில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவை தயார் செய்துவருகிறது. ஸ்கார்பியோ என்றாலே கம்பீரம் என்று சொல்லலாம். கெத்தாக ஃபீல் பண்ண ஒரு கார் வேண்டுமென்றால் அதற்கு ஸ்கார்பியோதான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருக்கும்.

அத்தகைய ஸ்கார்பியோ பிஎஸ் 6 தரத்துடன் புதிய அம்சங்களுடன் தயாராகியுள்ளது. முதல் தலைமுறை ஸ்கார்பியோவுக்குப் பிறகு 2017-ல் அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோவாக வெளியிட்டது மஹிந்திரா.

அந்த வகையில் இந்தப் புதிய ஸ்கார்பியோ மூன்றாம் தலைமுறை ஸ்கார்பியோ ஆகும். இது தற்போது தீவிர டெஸ்டிங்கில் இருந்து வருகிறது. சோதனை ஓட்டங்களின்போது எடுக்கப்பட்ட இதன் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இது Z101 என்ற குறியீட்டுப் பெயரால் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஸ்கார்பியோவின் டிசைன் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுவும் தற்போதுள்ள ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போலவே லேடர் ஃபிரேமில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சற்று மேம்படுத்தப்பட்ட கிரவுண்ட் அப் டிசைனில் இருக்கும் எனத் தெரிகிறது.

ஆட்டோமொபைல் துறையில் போட்டி அதிகமாக உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்களும் அதிகம் உள்ளன. எனவே, தேர்வு செய்யும்போது வாடிக்கையாளர்கள் கூடுதலான அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள்.

இதன்பொருட்டு புதிய ஸ்கார்பியோவில் கேபினில் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் வாய்ப்புள்ளது. நீளமான வீல் பேஸ் கொண்டதாகவும் உயரம் குறைவாகவும் இருக்கும் கூறப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் உள்ள  Mahindra North American Technical Centreல் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் உள்ள Mahindra Research Valley தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் டாப் வேரியன்ட் 170 ஹெச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கும். இதில் ஆரம்பத்தில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வர உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பின்னர் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in