

1926-ம் ஆண்டு பிறந்த திக் நியட் ஹான் வியட்நாமைச் சேர்ந்த பவுத்த துறவி, கவிஞர், மனித உரிமைகள் மற்றும் சமாதானத்துக்கான செயற்பாட்டாளர் ஆவார். தனது பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்ட இவர், வியட்நாம் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளில் பெரும் கவனம் செலுத்தியவர். எழுபதுக்கும் மேற்பட்ட ஆங்கில புத்தகங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஞானம், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான ஊக்குவிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் தனது பங்களிப்பினை செலுத்தியவர். குறிப்பிடத்தக்க பவுத்த மதத் துறவிகளுள் ஒருவராக அறியப்படுகிறார்.
# நம்மால் நமது பயத்தை ஒப்புக்கொள்ள முடிந்தால், இப்போது நாம் சரியாக இருப்பதை நம்மால் உணர முடியும்.
# பயம் நம்மை கடந்தகால நிகழ்வுகளில் கவனம் செலுத்தவோ அல்லது எதிர்காலத்தைப்பற்றி கவலை கொள்ளும்படியோ வைத்திருக்கிறது.
# ஓய்வெடுக்கும் கலையை நாம் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது.
# அன்பு என்பது கவனித்துக் கொள்வதற்கான, பாதுகாப்பதற்கான, ஊட்டமளிப்பதற்கான திறன்.
# தற்போதைய தருணத்தை நீங்கள் கைவிட்டுவிட்டால், உங்கள் தினசரி வாழ்க்கையின் தருணங்களை உங்களால் ஆழமாக வாழமுடியாது.
# நீங்கள் உயிருடன் இருப்பதால், அனைத்துமே சாத்தியமாகும்.
# நம்பிக்கை முக்கியம். ஏனென்றால், இது தற்போதைய தருணத்தை தாங்கக்கூடிய அளவிற்கான குறைவான கடினத்தைத் தருகிறது.
# நமது ஒவ்வொரு சுவாசத்தையும், ஒவ்வொரு அடியையும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டு நிரப்ப முடியும்.
# நாம் நேசிக்க விரும்பும் நபரைப் பற்றி உண்மையில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
# நாளை சிறப்பான நாளாக இருக்கும் என்று நாம் நம்பினால், இன்று நம்மால் ஒரு துன்பத்தை தாங்கிக்கொள்ள முடியும்.
# நம்மில் பலர் நம் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டேயிருக் கிறோம். நிறுத்தத்துக்கான பயிற்சியும் வேண்டும்.
# நமது சொந்த இரக்கத்தின் மூலமாக நமது இதயத்தை நிரப்புவோம்.