ரெனால்ட்டின் புதிய எம்பிவி ‘ட்ரைபர்’

ரெனால்ட்டின் புதிய எம்பிவி ‘ட்ரைபர்’
Updated on
1 min read

ரெனால்ட் நிறுவனத்திலிருந்து விரைவில் புதிதாக ஏழு இருக்கைகள் கொண்ட மல்டி யுடிலிட்டி வாகனம் ஒன்று சந்தைக்கு வரவிருக்கிறது. முன்பு ஆர்பிசி என்ற சங்கேத பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த எம்பிவிக்கு ‘ட்ரைபர்’ எனப் பெயர்  சூட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரைபர் காம்பேக்ட் எம்பிவி காராக இருக்கிறது.

இந்த ட்ரைபர் மாற்றியமைக்கப்பட்ட ரெனால்ட் க்விட் காரின் சிஎம்எஃப்-ஏ என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காம்பேக்ட் எம்பிவி என்றாலும் போதுமான இடவசதி மற்றும் அதிக அளவிலான தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தக் கார் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்தக் காரின் டீசர் வெளியீட்டில் உள்ள சில்லவுட் படத்தில் அப்ரைட் வடிவ பானெட் மற்றும் பெரிய முன்பக்க பம்பர் இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் காரின் வடிவமைப்பு வழக்கமான எம்பிவி போல் இல்லாமல் பிரீமியம் லுக்குடன் இருக்கலாம். பிரீமியம் தோற்றத்தை உறுதி செய்யும் வகையில், எல்இடி ரன்னிங் டேலைட், பெரிய அளவிலான கிரில், அதில் குரோம் பினிஷிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.

உட்புறத்திலும் டூயல் டோன் ஸ்போர்ட் பினிஷிங், டேஷ்போர்ட், ஸ்டியரிங், பக்கவாட்டு கதவுகள் ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன. மேலும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளன. ஜூலை மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ‘ட்ரைபர்’ எம்பிவியின் விலை ரூ. 5.3 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை என்ற விலை வரம்பில் இருக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in