

1225-ம் ஆண்டு முதல் 1274-ம் ஆண்டு வரை வாழ்ந்த தாமஸ் அக்குயினஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு மற்றும் தத்துவஞானி ஆவார். இயற்கை இறையியலின் முன்னணி பரப்புரையாளராக இருந்ததுடன், தனது காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க இறையியலாளராக விளங்கியவர்.
பயணம், எழுத்து, கற்பித்தல், பொது பேச்சு மற்றும் பிரசங்கம் போன்றவற்றிற்காக தனது வாழ்வினை அர்ப்பணித்துக் கொண்டவர். மேற்கத்திய சிந்தனை மீதான இவரது செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்துள்ளது. மிகச்சிறந்த மேற்கத்திய உலகின் தத்துவவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
# நம்பிக்கையுள்ள ஒருவருக்கு எவ்வித விளக்கமும் தேவையில்லை. நம்பிக்கையற்ற ஒருவருக்கு எவ்வித விளக்கமும் சாத்தியமில்லை.
# நம்மால் விரும்பப்படும் விஷயங்களே நாம் யார் என்பதை நமக்குச் சொல்கின்றன.
# ஒரு கேப்டனின் அதிகபட்ச நோக்கம் அவரது கப்பலை காப்பாற்றவேண்டும் என்பதாக இருந்தால், அவர் அதை எப்போதும் துறைமுகத்திலேயே வைத்திருப்பார்.
# நட்பு என்பது மிகப்பெரிய சந்தோஷங்களின் ஆதாரமாக விளங்குகிறது.
# நம் அனைவராலும் ஒரே நேரத்தில் முழு அறிவையும் பெற்றுவிட முடியாது.
# நன்றாக வாழ்வது என்பது நன்றாக செயல்படுவது, ஒரு நல்ல செயல்பாட்டினை வெளிக்காட்டுவது ஆகும்.
# இயற்கையின்படி, சுதந்திரமாக இருப்பதில் அனைத்து மனிதர்களும் சமம்.
# மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லாமல் மனிதனால் வாழ முடியாது.
# ஆபத்துகளை சகித்துக்கொள்வதும் பொறுத்துக்கொள்வதுமே தைரியத்தின் முதன்மை
யான செயல்பாடாகும்.
# மகிழ்ச்சி என்பது நல்லொழுக்கத்தின் மூலமாகப் பாதுகாக்கப்படுகிறது.
# நண்பர்கள் இல்லாமல் மிகவும் அனுகூலமான விஷயங்கள் கூட கடினமானதாக மாறிவிடுகின்றன.
# உண்மையான நட்பைக் காட்டிலும் மதிப்புமிக்க விஷயம் இந்தப் பூமியில் வேறு ஒன்றுமில்லை.
# அன்பு என்பது மற்றவரின் நன்மைக்காகவே செலுத்தப்
பட வேண்டியதாகும்.