

1962-ம் ஆண்டு பிறந்த ஜோர்டன் பீட்டர்சன் கனடாவைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், எழுத்தாளர், பேச்சாளர், கலாசார விமர்சகர் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர். அசாதாரண, சமூக மற்றும் ஆளுமை உளவியல் ஆகியன இவரது முக்கிய ஆய்வு பகுதிகளாகும். இவரது
“12 ரூல்ஸ் ஃபார் லைஃப்” என்னும் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை புரிந்ததோடு, ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவரது ஆன்லைன் விரிவுரைகள், வீடியோக்கள் மற்றும் நேர்காணல்கள் ஆகியன சர்வதேச முக்கியதுவம் பெற்றவை.
# பார்வை மற்றும் திசையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
# வாழ்க்கையில் உங்களால் பின்னோக்கிச் செல்ல முடியாது.
# ஒருபோதும் யாரும் எதையும் விட்டு விலகமுடியாது, எனவே உங்கள் சொந்த வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
# தினமும் உங்கள் கடமைகளை நிறைவேற்றினால், எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
# உங்களால் தாங்கக்கூடிய மற்றும் சுமக்கக்கூடிய மிகப்பெரிய சுமையை கண்டறிவதே வாழ்க்கையின் நோக்கம்.
# பெற்றோர்களுக்கான கேள்வி: நீங்கள் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டுமா அல்லது வலுவானவர்களாக ஆக்க வேண்டுமா?
# உங்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே மற்றவர்களுக்கும் நீங்கள் முக்கியம்.
# மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள்; நேற்று நீங்கள் யார் என்பதோடு உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
# உங்களின் சொந்த குறைபாடு பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள்.
# ஒரு நகரத்தை நிர்வகிப்பதை விட உங்களை நீங்கள் ஆளுவது மிகவும் கடினம்.
# சமத்துவமின்மை சமூகங்களை நிலையற்றதாக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
# மொழியை ஒரு கருவியாக்க வேண்டாம்.
# எதைப்பற்றியும் எப்போதும் பொய் சொல்லாதீர்கள். பொய் நரகத்துக்கு வழிவகுக்கும்.