

1870-ம் ஆண்டு முதல் 1952-ம் ஆண்டு வரை வாழ்ந்த மரியா மாண்டிசோரி இத்தாலிய கல்வியாளர் மற்றும் மருத்துவர் ஆவார். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தவர். சிறந்த மனோதத்துவ மருத்துவராகவும், சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர். இவரது பெயரிலான கல்வி தத்துவத்திற்காக பெரிதும் அறியப்படுபவர். இனிமையான மற்றும் எளிமையான இந்த புதிய கல்வி முறையானது சிறுவர் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள பல பள்ளிகளில் இவரது கல்வி முறை இப்போது பயன்படுத்தப்படுகிறது.
# ஆரம்பகால குழந்தைப்பருவ கல்வி என்பது சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு முக்கியமானது.
# ஒரு குழந்தை நிச்சயம் பெறவேண்டிய முதல் யோசனை என்ன வென்றால், நன்மைக்கும் தீமைக்குமான வேறுபாடே.
# குழந்தையின் கவனத்தைக் கட்டுப்படுத்தும் பிரச்சினையை நீங்கள் தீர்க்கும்போது, அதன் கல்வியின் முழுப் பிரச்சினையையும் நீங்கள் தீர்த்துவிடுகிறீர்கள்.
# நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதே கல்வியின் பணி.
# எல்லாவற்றுக்கும் மேலான அதிக ஆற்றல் வாய்ந்தது அன்பு.
# தேவையற்ற உதவி இயற்கை சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு உண்மையான தடை ஆகும்.
#கவனம் செலுத்தும் குழந்தையே மிகவும் மகிழ்ச்சியான குழந்தையாக உள்ளது.
# குழந்தைகள் அவர்கள் விரும்பும் விஷயங்களைப் போலவே இருக்கிறார்கள்.
# நிகழ்காலத்தை பாதுகாப்பதன் மூலமாக நாம் எதிர்காலத்திற்கு சேவை செய்கிறோம்.
# மொழியின் வளர்ச்சி என்பது ஆளுமையின் வளர்ச்சியில் ஒரு பகுதியே.
# குழந்தையின் மகிழ்ச்சியே கல்வி நடைமுறையின் சரியான சோதனையாகும்.
# தன்னால் வெற்றி பெற முடியும் என்று ஒரு குழந்தை உணர்கிற வேளையில், அக்குழந்தைக்கு உதவி செய்யாதீர்கள்.