வெற்றி மொழி: மரியன்னே வில்லியம்சன்

வெற்றி மொழி: மரியன்னே வில்லியம்சன்
Updated on
1 min read

1952-ம் ஆண்டு பிறந்த மரியன்னே வில்லியம்சன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆன்மிக ஆசிரியர், எழுத்தாளர், விரிவுரையாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான விருந்தினர் போன்ற பன்முக செயற்பாட்டாளர். விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்கள் உட்பட மொத்தம் பதிமூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.

இவரது புத்தகங்கள் சுமார் மூன்று மில்லியன்களுக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதோடு, சில படைப்புகள் ஸ்பானிஷ் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் மிகப் பிரபலமான நபர்களுள் ஒருவராக இருந்துள்ளார்.

# நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள், உங்கள் நோக்கம் அன்பு செலுத்தவேண்டும் என்பதே.

# மன்னிப்பதற்கான விருப்பமே மன்னிப்பிற்கான முதல் படி.

# மன்னிக்காமல் இருப்பது, நீங்கள் விஷத்தைக் குடித்துவிட்டு வேறு ஒருவரின் மரணத்திற்காக காத்திருப்பதைப் போன்றது.

# நமது இதயங்களின் உள்ளார்ந்த அறிவாற்றலே அன்பு ஆகும்.

# எல்லையற்ற பொறுமை மட்டுமே உடனடி முடிவுகளை உருவாக்குகிறது.

#உங்கள் மனதில் உள்ள அன்பு உங்கள் வாழ்க்கையில் அன்பை உருவாக்குகிறது.

# ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கம்.

# தாவரங்களுக்கு நீர் எப்படியோ அதுபோல மனிதர்களுக்கு அன்பு.

# அன்பு என்பது பிறப்பால் வந்தது. பயம் என்பது  நாம் கற்றுக் கொண்டது

# மன்னிப்பு என்பது எப்போதும் எளிதான விஷயம் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in