வெற்றி மொழி: எச் பி லவ்கிராஃப்ட்

வெற்றி மொழி: எச் பி லவ்கிராஃப்ட்
Updated on
1 min read

1890-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை வாழ்ந்த எச் பி லவ்கிராஃப்ட் அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். தனது செல்வாக்குமிக்க படைப்புகளான திகில் நாவல்களின் மூலமாக பெரும் புகழ் பெற்றவர். இவர் இருபதாம் நூற்றாண்டு திகில் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பின்னாளைய எழுத்தாளர்களுக்கு தூண்டுகோலாக விளங்கியதோடு, இவரது படைப்புகள் பல திரைப்படங்கள் உருவாவதற்கும் அடிப்படையாக விளங்கின. தான் வாழ்ந்த காலத்தை விட, இறப்பிற்குப் பிறகே அதிக புகழையும் பாராட்டுகளையும் பெற்றவர்.

# குழந்தைப் பருவ நினைவுகள் யாருக்கு அச்சம் மற்றும் சோகத்தை மட்டுமே தருகிறதோ அவரே மகிழ்ச்சியற்றவராகிறார்.

# கற்பனை என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த விஷயம்.

# நினைவுகள் மற்றும் சாத்தியங்கள் ஆகியன யதார்த்தங்களை விட அதிகம் பயங்கரமானவை.

# இயற்கையின் ஒழுங்கை மீறுவதே அனைத்து உண்மையான திகிலின் அடிப்படையாகும்.

# மனிதர்களின் பழமையான மற்றும் வலிமையான உணர்வு பயம்.#

# ஒரு கதையின் முடிவானது கண்டிப்பாக தொடக்கத்தை விட வலுவானதாக இருக்க வேண்டும்.

# எந்த யதார்த்தமும் அழகாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.

# மூளையில் உள்ள ஓவியங்களின் தொகுப்பே அனைவரின் வாழ்க்கை.

# மிகப்பெரிய மனித சாதனைகள் ஒருபோதும் லாபத்திற்காக இருந்ததில்லை.

# உடலின் சக்தியே மனித முடிவுகளின் ஒரே இறுதி காரணியாகும்

# ஒருபோதும் எதையும் விவரித்துக் கூறாதீர்கள்.

# வாழ்க்கை ஒரு பயங்கரமான விஷயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in