

ஏஎம்சி குக்வேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நவிஜீனியோ என்ற ஸ்மார்ட் ஹாட்பிளேட் அடுப்பு முழுமையான ஆட்டோமேட்டிக் அடுப்பாகும். இதில் எந்த வகையான உணவையும், சரியான வெப்பநிலையில், குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கலாம். இது ‘ஆடியோதெர்ம்’ தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் ஏஎம்சி நிறுவனத்தின் பாத்திரங்களை மட்டுமே வைத்து சமைக்க முடியும். அளவில் சிறிய, எடை குறைவான, எளிமையாக இயக்கக்கூடிய இந்த நவிஜீனியோ அடுப்பின் விலை ரூ. 40 ஆயிரத்துக்கும் மேல்.
மாஸ்டர் மவுஸ்
கம்ப்யூட்டரில் மிக முக்கியமானது மவுஸ். இது வேலை செய்யாமல் போனால் எந்த அளவுக்கு சிரமம் உண்டாகும் என்பது அதுபோன்ற சிக்கலில் மாட்டியவர்களுக்குத் தெரிந்திருக்கும். மவுஸ் விரைவாக இயங்குவதோடு, அழகாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு லாஜிடெக் நிறுவனம் மாஸ்டர் 2எஸ் என்ற மவுஸை உருவாக்கியுள்ளது.
இது சாதாரண மவுஸின் வேலைகளோடு சேர்த்து கேம்ஸ் விளையாடுவது உட்பட இன்னும் சில இதர வேலைகளையும் எளிமையாக்குகிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.8,995.
நோக்கியா ட்ரூ இயர்பட்
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் முதன்முறையாக வயர்லெஸ் இயர்பட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட் என்று பெயரிடப்பட்டுள்ள இது மற்ற இயர்பட்களைக் காட்டிலும் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது. காதில் பொருத்திக்கொள்ள கச்சிதமாக உள்ளது.
அதேசமயம் சார்ஜிங் செய்துகொள்வதும், பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் எளிது. இது தொடர்ச்சியாக 4 மணி நேர ஆடியோ பிளேபேக் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் விலை தான் சற்று அதிகம். ரூ.9,999.