வெற்றி மொழி: எக்ஹர்ட் டோலே

வெற்றி மொழி: எக்ஹர்ட் டோலே
Updated on
1 min read

1948-ம் ஆண்டு பிறந்த எக்ஹர்ட் டோலே ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். மேலும், இவர் எந்தவொரு மதத்தையும் சாராத ஆன்மீக குருவாக கருதப்படுகிறார். இவரது தெளிவான மற்றும் எளிமையான ஆன்மீக கருத்துகள் மிகவும் பிரபலமானவை. மில்லியன் கணக்கான பிரதிகள் விற்று, விற்பனையில் சிறந்து விளங்கும் “தி பவர் ஆஃப் நவ்” மற்றும் “எ நியூ எர்த்” ஆகிய சிறந்த படைப்புகளுக்காக பெரிதும் அறியப்படுகிறார். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஆன்மீக எழுத்தாளராகவும், உலகின் அதிக ஆன்மீக செல்வாக்குள்ள நபராகவும் புகழப்படுபவர். இவரது புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

# தற்போதைய தருணத்தில் நீங்கள் அதிகம் வாழும்போது, மரணத்தின் மீதான பயம் அதிகம் மறைந்து போகிறது.

# ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஆற்றல் தற்போதைய தருணத்தில் அடங்கியுள்ளது.

# நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே முழுவதுமாக இருங்கள்.

# உங்கள் எதிரிகளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது.

# நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் இல்லை, நீங்களே பிரபஞ்சம்.

# ஒரு நல்ல நிகழ்காலத்தை உருவாக்குவதன் மூலம், நீங்கள் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

# நீங்கள் இந்த தருணத்தில் வாழ்ந்திராவிட்டால், நீங்கள் உண்மையிலேயே வாழ்வதில்லை.

# தற்போதைய தருணமே உங்களுக்கான அனைத்தும் என்பதை ஆழமாக உணருங்கள்.

# செயல்படுத்தப்படும் என்றால், சிந்தனை ஒரு அற்புதமான ஆயுதமாகும்.

# வாழ்க்கை என்பது ஒரு சாகசம், அது ஒரு பேக்கேஜ் டூர் அல்ல.

# சரியாகப் பயன்படுத்தினால் மனம் ஒரு சிறப்பான கருவியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in