வெற்றி மொழி: டக்ளஸ் மெக்ஆர்தர்

வெற்றி மொழி: டக்ளஸ் மெக்ஆர்தர்
Updated on
1 min read

1880-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை வாழ்ந்த டக்ளஸ் மெக்ஆர்தர் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற இராணுவ தளபதி ஆவார். முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த பெருமைக்குரியவர். தனது வாழ்நாளில் அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளிலிருந்து எண்ணற்ற கவுரவங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். தெருக்கள், திட்டங்கள் மற்றும் விருதுகள் மட்டுமின்றி தங்களது குழந்தைகளுக்கு மெக்ஆர்தரின் பெயரை சூட்டும் அளவிற்கு அமெரிக்க மக்களிடையே இவர் மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.

# கடந்த காலத்தை மீண்டும் பெற முயற்சிப்பதில்லை என்பதே நான் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் கசப்பான பாடங்களில் ஒன்று.

# எங்களது சிறந்த நாட்டின் பாதுகாப்பிற்காக நான் அக்கறை கொண்டுள்ளேன்.

# போரில் வெற்றிக்கு மாற்றான விஷயம் வேறு எதுவுமில்லை.

# நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறந்த உலகம் உருவாகும்.

# நாங்கள் பின்வாங்கவில்லை – மற்றொரு திசையில் நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

# சுதந்திரத்தின் தவிர்க்கமுடியாத விலையானது அழிவிலிருந்து அதைக் காப்பாற்றும் திறனாகும்.

# வெற்றிக்கான விருப்பமின்றி எந்தவொரு போரிலும் நுழைவது அபாயகரமானது.

# ஒரு நல்ல திட்டத்தை வைத்துக்கொள்ளுங்கள், அதை தீவிரமாக செயல்படுத்துங்கள் மற்றும் அதனை இன்றே செய்யுங்கள்.

# தயார்படுத்திக் கொள்ளுதல் என்பது வெற்றிக்கு மிகவும் முக்கியமான விஷயம்.

# உங்களால் உடைக்கப்படும் விதிகளுக்காக நீங்கள் நினைவில் வைக்கப்படுகிறீர்கள்.

# நீங்கள் உங்களுக்காக உருவாக்கும் அதிர்ஷ்டமே அனைத்திலும் சிறந்த அதிர்ஷ்டம்.

# இறப்பதற்கு பயப்படாதவர்கள் மட்டுமே வாழ்வதற்கான தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in