வெற்றி மொழி: டெசிடெரியஸ் எராஸ்மஸ்

வெற்றி மொழி: டெசிடெரியஸ் எராஸ்மஸ்
Updated on
1 min read

1466-ம் ஆண்டு முதல் 1536-ம் ஆண்டு வரை வாழ்ந்த டெசிடெரியஸ் எராஸ்மஸ் டச்சு நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி, எழுத்தாளர், இறையியலாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். மேலும், கத்தோலிக்க குருமாராகவும் மற்றும் புகழ்பெற்ற மனிதநேயவாதியாகவும் விளங்கியவர். வடக்கு ஐரோப்பாவில் மனிதநேய இயக்கத்திற்கான பணியில் பெரும்பங்கு வகித்தவர். புதிய ஏற்பாட்டின் இவரது கிரேக்க மொழிபெயர்ப்பு ஒரு இறையியல் புரட்சியை ஏற்படுத்தியது. அவரது தலைமுறையின் ஆற்றல்மிக்க எழுத்தாளராக மட்டுமின்றி ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான அறிஞர்களுள் ஒருவராக அறியப்பட்டவர்.

# போரைப் பற்றிய அனுபவம் இல்லாதவர்களுக்கு போர் மகிழ்ச்சிகரமானது.

# உங்களது நூலகமே உங்கள் சொர்க்கம் ஆகும்.

# நீங்கள் அழைக்கப்படுவதற்கு முன் உங்கள் ஆலோசனையை தெரிவிக்காதீர்கள்.

# மறைக்கப்பட்ட திறமை ஒருபோதும் எவ்வித மதிப்பினையும் பெற்றுத்தருவதில்லை.

# துணிச்சல் மிக்கவர்களுக்கு அதிர்ஷ்டம் உதவி செய்கிறது.

# ஒளி கொடுங்கள், இருள் தன்னை மறைத்துவிடும்.

# ஒரு நாட்டின் முக்கிய நம்பிக்கை அந்நாட்டு இளைஞர்களின் முறையான கல்வியில் உள்ளது.

# ஒரு நகம் மற்றொரு நகத்தின் மூலமாக வெளியேற்றப்படுகிறது. ஒரு பழக்கம் மற்றொரு பழக்கத்தின் மூலமாக மாற்றப்படுகிறது.

# குருடரின் இராஜ்யத்தில், ஒரு கண்ணை உடைய மனிதனே அரசன்.

# அடக்குமுறையை அனுமதிக்கிறவர் குற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

# எதுவும் தெரியாமல் இருப்பது மகிழ்ச்சியான வாழ்க்கை.

# ஒரு நாட்டின் முக்கிய நம்பிக்கை அந்நாட்டு இளைஞர்களின் முறையான கல்வியில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in