வெற்றி மொழி: தீபக் சோப்ரா

வெற்றி மொழி: தீபக் சோப்ரா
Updated on
1 min read

1946 -ம் ஆண்டு பிறந்த தீபக் சோப்ரா இந்திய-அமெரிக்க எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் மாற்று மருத்துவ ஆலோசகர் ஆவார். மேலும், அமெரிக்க ஆயுர்வேத மருத்துவ சங்கத்தின் நிறுவனர் தலைவர். தனது பள்ளிப்படிப்பையும், மருத்துவ பட்டப்படிப்பையும் இந்தியாவில் முடித்தவர். தன்னுடைய புத்தகங்கள் மற்றும் வீடியோக்களின் மூலமாக, மாற்று மருத்துவத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்குடைய நபர்களுள் ஒருவராக திகழ்கிறார். சிறப்பான விற்பனைக்கான பட்டியலில் இடம்பெற்ற இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உட்பட எண்பதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நாற்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

# தங்களுக்குள்ளே அனைத்து கருவிகளும் இருப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

# அன்பிற்கு காரணம் தேவையில்லை. இதயத்தின் பகுத்தறி வற்ற ஞானத்திலிருந்து அது பேசுகிறது.

# வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்திற்கான உண்மையான ரகசியம் உண்மையில் எதிர்மாறாக இருக்கிறது: உங்கள் உடல் உங்களை கவனித்துக்கொள்ளட்டும்.

# ஒவ்வொரு நாளையும் சந்தோசமாக மாற்றுவதே, மகிழ்ச்சியாக இருப்பதற்கான சிறந்த வழி என்று ஆராய்ச்சி கூறுகிறது.

# பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தனிமையாகவும் உதவியற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.

# எப்போதும் பேரார்வத்துடன் செயல்படுங்கள். அது யதார்த்தமானதா இல்லையா என்று உங்களிடம் ஒருபோதும் கேட்டுக்கொள்ளாதீர்கள்.

# மற்றவர்களுக்காக உங்கள் இதயம் குறைவாக திறக்கப்படும்போது, அது அதிகமாக பாதிக்கப்படுகிறது.

# தற்போதைய தருணத்தில் நீங்கள் வாழும்போது, நீங்கள் செய்ய விரும்பிய எதையும் செய்வதற்கான நேரத்தை வாழ்க்கை உங்களுக்கு கொடுக்கிறது.

# எதிர்ப்பில்லாத நடப்புகளின் தொடர்ச்சியே மகிழ்ச்சி என்பதாகும்.

# மகிழ்ச்சியின் விரிவாக்கமே வாழ்க்கைக்கான நோக்கம் ஆகும்.

# ஒவ்வொரு பெரிய மாற்றமும் குழப்பத்தினாலேயே முன்னெடுக்கப்படுகிறது.

# ஆற்றைத் திசைத்திருப்ப முயற்சிக்கா தீர்கள்.

# மனம் மற்றும் உடலுக்கு இடையே எந்தவித பிரிவும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in