

1969-ம் ஆண்டு பிறந்த பிரையன்ட் எச் மெக்கில் அமெரிக்க எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர். சுய முன்னேற்றம், தனிமனித சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளின் செயற்பாட்டாளர். இவரது கருத்துகள் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியாகி, அறுபது மில்லியனுக்கும் அதிகமானோரால் படிக்கப்பட்டுள்ளது. தனது ஊக்கமூட்டும் எழுத்து மற்றும் பேச்சுக்களின் வாயிலாக சமூக வலைத்தளங்களில் பெரிதும் செல்வாக்கு செலுத்துபவர். உலகின் சிறந்த சமூக ஊடக செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
# மரியாதையின் மிகவும் நேர்மையான வடிவங்களில் ஒன்று, உண்மையில் வேறு என்ன சொல்லவேண்டும் என்று கேட்பதாகும்.
# அதிசயிக்கும் விதமாக நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அற்புதமான மக்கள் உள்ளனர்.
# சில தவறுகளை செய்யும் ஒரு நபர் சிறிது முன்னேற்றம் அடைகிறார்.
# பிறப்பு மற்றும் இறப்பு; இந்த இரண்டு அறியப்படாத நிலைகளுக்கிடையே நாம் அனைவரும் நகர்கிறோம்.
# உங்கள் உண்மையான அடையாளத்தை அடக்குவதிலிருந்தே அனைத்து அசௌகரியங்களும் வருகின்றன.
# படைப்பாற்றல் என்பது சுதந்திரத்தின் மிகப்பெரிய வெளிப்பாடு ஆகும்.
# உங்கள் சக மனிதனுக்கான சேவையில் செலவழித்ததைவிட, சிறப்பாக செலவழிக்கப்பட்ட நேரம் எதுவுமில்லை.
# நற்குணத்தைத் தேடுங்கள், நற்குணத்தோடு இருங்கள். அழகைத் தேடுங்கள், அழகுடன் இருங்கள். அன்பைத் தேடுங்கள், அன்புடன் இருங்கள்.
# மன்னிப்பு இல்லாமல் அன்பு என்பது இல்லை, அன்பு இல்லாமல் மன்னிப்பு என்பது இல்லை.
# எந்தளவிற்கு கெட்ட பழக்கங்கள் வெறுக்கப்படு கின்றனவோ, அந்தளவிற்கு நல்ல பழக்கங்கள் பாராட்டப்படுகின்றன.
# பல வழிகளிலும் மக்கள் நமது மிகப்பெரிய பொக்கிஷங் களில் ஒன்று.
# மகிழ்ச்சியின் பெரும் இரகசியங்களில் ஒன்று ஆர்வம்.
# உங்கள் சொந்த எண்ணங்களே உங்களது வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் சந்திக்கும் மோசமான அட்டூழியங்கள்.