

1944-ம் ஆண்டு பிறந்த பிரையன் டிரேசி கனடிய அமெரிக்க மனிதவள மேம்பாட்டு நிபுணர், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்ற எழுத்தாளர். தலைமைத்துவம், விற்பனை, சுயமதிப்பு, இலக்குகள், வியூகம், படைப்பாற்றல் மற்றும் உளவியல் தொடர்பான இவரது கருத்துக்கள் புகழ்பெற்றவை. தனது உரைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக உலகம் முழுவதும் எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியவர். தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை, பல்வேறு நாடுகளில் ஐந்தாயிரம் பயிலரங்குகள், ஐம்பது லட்சம் பேரிடம் கலந்துரையாடல் என பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
# நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவையே உங்களால் மற்ற வர்களுக்கு கொடுக்க முடிந்த மிகப்பெரிய பரிசு.
# உங்களுக்கு சாதகமான மாற்றத்தின் திசையை கட்டுப்படுத்த இலக்குகள் உங்களை அனுமதிக்கின்றன.
# தகவல் பரிமாற்றம் என்பது உங்களால் கற்றுக்கொள்ள முடிந்த ஒரு திறமை.
# நீங்கள் புதிதாக ஏதாவது முயற்சி செய்யும்போது மோசமாகவும் சங்கட மாகவும் உணர தயாராக இருந்தால் மட்டுமே உங்களால் வளர முடியும்.
# வெற்றிகரமான மக்கள் என்பவர் கள் வெறுமனே வெற்றிகரமான பழக்கங்களை கொண்டவர்கள்.
# முன்னேற்றம் என்பது உங்களது தற்போதைய சூழ்நிலையை விட பெரிய மற்றும் சிறந்த ஒன்றை அடைவதற்கு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
# வெற்றிக்கு முக்கியமானது நாம் விரும்பும் விஷயங்களில் நம் மனதை கவனம் செலுத்துவதாகும், நாம் பயப்படும் விஷயங்களில் அல்ல.
# உங்கள் பெரிய சொத்து உங்களது சம்பாதிக்கும் திறன். உங்கள் மிகப்பெரிய ஆதாரம் உங்களது நேரம்.
# செயல்திறனே எந்த வணிகத் தலைவர் மற்றும் மேலாளரின் மதிப்பிற்கான உண்மையான அளவுகோலாகும்.
# உங்களது வருமானத்தில் மூன்று சதவீதத்தை, சுய மேம்பாட்டிற்காக முதலீடு செய்யுங்கள்
# நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.