

ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது பிரபல மாடலான ஜாகுவார் எக்ஸ்ஜே50 -யில் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக சர்வதேச அளவில் தொழிலதிபர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் விருப்பமான வாகனமாக இருந்துள்ளது எக்ஸ்ஜே மாடல். இது சொகுசு மாடல் காராகும்.
புதிய சிறப்பு எடிசன் மாடலின் சக்கரம் சற்று அகலமானது. இது 3 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இது உயர் வேகத்தில் 225 கிலோவாட் மின்சாரத்தை வெளிப்படுத்தக் கூடியது. முன்புற மற்றும் பின்புற பம்பர் மிகச் சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. குரோம் ரேடியேட்டர் கிரில், மென்மையான தோலினால் ஆன இருக்கைகள் அதில் ஜாகுவார் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு எடிசன் ஜாகுவாருக்கு மேலும் பெருமை சேர்க்கும். கார் பிரியர்கள் மத்தியில் இது சிறந்த வரவேற்பைப் பெறும். இதன் விலை ரூ. 1.11 கோடி.