

1943-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆர்தர் ஆஷே, மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர். பல்வேறு எதிர்ப்புகள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என அனைத்தையும் எதிர்கொண்டு டென்னிஸ் விளையாட்டில் முத்திரை பதித்தவர். அமெரிக்க டேவிஸ் கோப்பை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின வீரர் இவரே. மேலும், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றில் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் இவர். சுதந்திரத்திற்கான அதிபர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
# எங்கு இருக்கிறீர்களோ, அங்கிருந்தே தொடங்குங்கள். உங்களிடம் எது உள்ளதோ, அதையே பயன்படுத்துங்கள். உங்களால் எது முடியுமோ, அதையே செய்யுங்கள்.
# எனது இனம் அல்லது இன அடையாளத்தின் எல்லைக்குள் வெளிப்படுத்த முடிந்ததை விட என்னுடைய திறன் அதிகம்.
# கல்வியின் சக்தியில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.
# “எனக்கான நேரத்தை நான் சிறந்த முறையில் பயன்படுத்தினேனா?” என்று நாம் நம்மிடம் கேட்டுக்கொள்வதே வாழ்க்கையை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி.
# நாம் என்ன பெறுகிறோமோ, அதிலிருந்து வாழ்க்கையை உருவாக்க முடியும்; எனினும் நாம் என்ன கொடுக்கிறோமோ, அதுவே வாழ்க்கையை உருவாக்குகிறது.
# செயல்படுவது என்பது பெரும்பாலும் கிடைக்கப்போகின்ற பலனை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
# தன்னம்பிக்கைக்கான மிக முக்கியமான விஷயம் முன்னேற்பாடு.
# உண்மையில் நீங்கள் ஒருபோதும் உங்கள் எதிர்ப்பாளருடன் விளையாடுவதில்லை. நீங்கள் உங்களிடமே விளையாடுகிறீர்கள்.
# உடலளவில் தளர்வுடனும், மனதளவில் இறுக்கத்துடனும் இருக்க வேண்டியதே சிறந்த அணுகுமுறை.
# ஒரு புத்திசாலி நபர் மெதுவாகத் தீர்மானிப்பார், ஆனால் அந்த முடிவுகளில் உறுதியாக இருப்பார்.
# வெற்றி என்பது சென்று சேரும் இடமல்ல, அது ஒரு பயணம்.
# தன்னம்பிக்கையே வெற்றிக்கான மிக முக்கிய திறவுகோலாகும்.
# எனது டென்னிஸ் சாதனைகளை நினைவுபடுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.