வெற்றி மொழி: ஆலிஸ் வாக்கர்

வெற்றி மொழி: ஆலிஸ் வாக்கர்
Updated on
1 min read

1944-ம் ஆண்டு பிறந்த ஆலிஸ் வாக்கர் அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர். சிறுவயதிலேயே புத்தகங்கள் மற்றும் கவிதைகளின் மீது அதீத ஈடுபாடு உடையவராக விளங்கினார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என பல வகைகளில் தனது படைப்புகளைக் கொடுத்துள்ளார். புலிட்சர், தேசிய புத்தக விருது உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். எழுத்து மட்டுமின்றி பெண்ணியவாதியாகவும், பொதுநலவாதியாகவும் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டவர். இவரது புத்தகங்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

# பிரச்சாரம் அற்புதமானது. மக்கள் எதையும் நம்புவதற்கு அது வழிவகுக்கலாம்.

#எவராலும் சொல்ல முடிந்த சிறந்த பிரார்த்தனை “நன்றி”.

# எதை மனம் புரிந்து கொள்ளவில்லையோ, அதுவே வழிபாடு அல்லது அச்சம்.

# நேரம் மெதுவாக நகரும், ஆனால் விரைவாக கடந்துசெல்லும்.

# தங்களிடம் எதுவுமில்லை என்று மக்கள் எண்ணுவதே, அவர்கள் தங்களது அதிகாரத்தை கைவிடுவதற்கான பொதுவான வழி.

# எனது அடுத்த திட்டம் பற்றி நான் ஒருபோதும் பேசியதில்லை.

# உங்களது மகிழ்ச்சிக்காக நீங்கள் மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டாம்.

# உண்மையிலேயே மாற்றம் மட்டுமே எப்போதும் நடக்கின்ற ஒரே விஷயம் என்பதை ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

# உங்களை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமானது.

# நாம் மற்ற உயிரினங்களை சமமாகப் பார்க்கத் தொடங்க வேண்டும்.

# அன்பு செலுத்துவதற்கான வாய்ப்பை நீங்கள் நேசிப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதை அவர்கள் ஏற்கவில்லை என்றால், அது அவர்களின் இழப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in