

சொகுசு கார்களில் முன்னியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இம்மாதம் 30-ம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தொடங்க உள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியில் தனது மூன்றாம் தலைமுறை எஸ்யுவி ரக மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
மெர்சிடஸ் மேபாஷ் ஜிஎல்எஸ் மாடல் தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இதன் உள்புறத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் சவுகர்யமாக பயணிக்கலாம்.
சொகுசு மாடல் எஸ்யுவி-க்களில் பென்ட்லே மற்றும் லாண்ட் ரோவர் மாடல்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பென்ஸ் நிறுவனமும் புதிய மாடல் எஸ்யுவி-யைகளமிறக்குகிறது. புதிய மாடலுக்கு ஜிஎல்எஸ் 560 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பிரத்யேகமான ஏஎம்ஜி எம்177 வி8 பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. ட்வின் டர்போசார்ஜ்டு 4 லிட்டர் வி 8 இன்ஜின் 468ஹெச்பி திறனை வெளிப்படுத்தக் கூடியது.