

1900-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆன்டெய்ன் டி செயிண்ட்-எக்ஸ்பேரி பிரஞ்சு எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் விமானி. சிறுவயதிலேயே விமானம் தொடர்பான விஷயங்களில் அதீத ஈடுபாடு உடையவராக விளங்கினார். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட, புகழ்பெற்ற “தி லிட்டில் பிரின்ஸ்” என்னும் தனது நாவலுக்காக பெரிதும் அறியப்படுகிறார்.
பிரான்சின் உயர்ந்த இலக்கிய விருதுகள் மற்றும் அமெரிக்க தேசிய புத்தக விருது உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். விமான நிலையம், அருங்காட்சியகம், சாலை மற்றும் பள்ளிகள் என பல்வேறு இடங்களுக்கு இவரது பெயரிடப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
# மற்றவர்களை மதிப்பிடுவதைக் காட்டிலும் தன்னைத்தானே மதிப்பீடு செய்துக்கொள்வது என்பது மிகவும் கடினமானது.
# பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனிதனே தலைவன்.
# நம் துரதிர்ஷ்டங்கள் கூட, நமது உடமைகளின் ஒரு பகுதியே.
# திட்டம் இல்லாத இலக்கு என்பது வெறும் ஆசை போன்றது.
# உண்மையான அன்பு வற்றாதது; நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகப் பெறுகிறீர்கள்.
# செயல்படுவதற்கான நேரம் இதுவே. எவ்வித செயலையும் செய் வதற்கு இப்போது ஒன்றும் தாமதமாகி விடவில்லை.
# விஷயங்களின் பொருளானது அவைகளை நோக்கிய நமது அணுகுமுறையில் உள்ளதே தவிர, அவ்விஷயங்களில் இல்லை.
# சிறப்பாக செய்து முடிக்கப்பட்ட செயல்களின் மகிழ்ச்சியிலிருந்தே உண்மையான இன்பம் கிடைக்கிறது.
# பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காத போது உண்மையான அன்பு தொடங்குகிறது.
# உலகின் மிக அழகான விஷயங்கள் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாதவை, அவைகள் இதயத்தால் உணரப்பட்டவை.
# வாழ்வின் உண்மையை நிரூபிக்கும் அதிர்வுகளில் ஒன்று துக்கம்.
# முயற்சி என்பதே ஒரே முக்கியமான விஷயம்.
# இதயத்தால் மட்டுமே ஒருவரால் சரியாகப் பார்க்க முடியும்.