

1915-ம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரை வாழ்ந்த தாமஸ் மெர்டன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். துறவி, மத அறிஞர், சமூக ஆர்வலர், கவிஞர் மற்றும் இறையியலாளர் போன்ற பன்முகத் திறனாளராக விளங்கியவர். எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவை பெரும்பாலும் ஆன்மிகம், சமூக நீதி மற்றும் சமாதானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
மேலும் பல்வேறு கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்களும் இவரது படைப்புகளில் அடங்கும். அமெரிக்க இந்திய ஆன்மீகம் தொடர்பான தனது ஆராய்ச்சியின் வாயிலாக, அமெரிக்க இந்திய வரலாறு மற்றும் ஆன்மீகம் குறித்த தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளராக பரவலாக அறியப்படுகிறார்.
> கலை நம்மை நாமே கண்டுபிடிக்கவும், அதே நேரத்தில் நம்மை இழக்கவும் உதவுகின்றது.
> அன்பின் ஆரம்பம், நாம் நேசிப்பவர்களை நமது சொந்த கருத்துக்கு திசைதிருப்பாமல் அவர்களாகவே இருக்க அனுமதிப்பது.
> மகிழ்ச்சி என்பது தீவிரமான விஷயம் அல்ல, சமநிலை, ஒழுங்கு, லயம் மற்றும் இணக்கமே மகிழ்ச்சி.
> வாழ்க்கையின் அர்த்தத்தை தனியாக நம்மால் கண்டறிய முடியாது, மற்றொருவருடன் இணைந்தே அதை கண்டறிய முடியும்.
> பெருமை நம்மை செயற்கையானவராக உருவாக்குகிறது, பணிவு நம்மை உண்மையானவராக உருவாக்குகிறது.
> எப்போது லட்சியம் முடிவடைகிறதோ, அப்போது மகிழ்ச்சி தொடங்குகிறது.
> நாம் மற்றவர்களுடன் சமாதானமாக இல்லை, ஏனெனில் நாம் நம்மிடம் சமாதானமாக இல்லை.
> நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் முடிவில் உங்களது வாழ்க்கை வடிவமைக்கப்படுகிறது.
> நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அந்த விதமாகவே நீங்கள் உருவாக்கப்படுகிறீர்கள்.
> சமாதானமானது மிகவும் வீரமான உழைப்பு மற்றும் மிகவும் கடினமான தியாகத்தை கோருகிறது.
> அன்பு ஒரு விஷயத்தை மட்டுமே தேடிச்செல்கிறது: நேசித்த ஒருவரின் நன்மை.
> ஒரு கேள்வியின் பதிலில் இருப்பதை விட மௌ
னத்தின் பொருளில் அதிக ஆறுதல் உள்ளது.
> வன்முறை நம்மைத் தொந்தரவு செய்யாத வரை, அது முற்றிலும் அபாயகரமானதல்ல.
> மோசமாக வெற்றிபெறும் ஒருவரை விட, நன்றாக தோல்வியடைந்த ஒருவர் சிறந்தவர்.