

என்னால் உடல் உழைப்பு செய்ய முடியாது. வயதாகி விட்டது. அல்லது உடலில் தெம்பு இல்லை. அல்லது அப்படி கடுமையாக வேலை செய்ய என் மனம் ஒப்பவில்லை என்பவர்கள் இருக்கலாம். இந்த பரபரப்பான உலகில் அதற்கும் வழி இருக்கிறது. அதற்காக ஒன்றுமே செய்யாமல் எதுவும் கிடைக்காதுதான். கொஞ்சம் செய்தால் போதும். அடுத்து பார்க்க இருக்கிற எளிதான வழி, ’பேபி சிட்டிங்’ அப்படிப்பட்டதுதான்.
அதிக உடல் உழைப்பின்றி, பெரிய படிப்பு இல்லாதவர்களும் செய்து சம்பாதிக்கக் கூடிய வேலை இது. அப்படியென்றால், இந்த வேலைக்கு தகுதி என்று ஏதும் இல்லையா? ஏனில்லாமல்? இருக்கிறது. சுத்தமாக இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்கள் இருக்கக் கூடாது. பேச்சு இங்கிதமாக இருக்க வேண்டும். எதிர்பார்க்கும் நேரத்துக்கு சரியாக போய்விட வேண்டும். முழுநேரமும் அங்கேயே இருக்க வேண்டும்.