

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி, கடன் சுமை மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானைப் பொருத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட ராணுவம்தான் அதிகாரம் மிக்கதாக இருந்து வருகிறது.
இதனால் ஆட்சியாளர்களால் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான கொள்கைகளை சுதந்திரமாக வகுக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க, தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்குகின்றன.