

பகுதிநேர வேலைக்கு பதினெட்டு வயது முடிந்திருக்க வேண்டும். சொந்தமாக வண்டி, போன் மற்றும் நல்ல இணைய இணைப்பு மற்றும் பணம் பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். கூடவே, அக்கறையுடனும் கவனமுடனும் வேலையை குறித்த நேரத்திலும் செய்து முடிக்கும் மனோபாவம் வேண்டும்.
சொந்தமாக வண்டி என்றால், கார் மட்டுமல்ல, பைக், ஸ்கூட்டர் போன்றவை இருந்தாலும் ஊபர், ஓலா, ரேபிடோ நிறுவனங்கள் மூலம் ‘பைக் டேக்ஸி’ சேவை கொடுக்கலாம். அதுவும் இல்லையென்றால், கார் வைத்திருப்பவர்களுக்கு ‘ஆக்டிங் டிரைவர்கள்’ ஆகப் போகலாம்.