

பணம் என்பது செல்வம். ஆனால் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல பணம் மட்டுமே செல்வம் இல்லை. அது, செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வடிவம் மட்டும்தான். அதை ஈட்டுவதற்கு வளங்களைப் பயன்படுத்த வேண்டும். வளம் என்றால், மனித வளம், கனிம வளம், நீர் வளம்,நில வளம் என்பது இன்னும் சில. இப்படிப்பட்ட வளங்களை வைத்துப் பணம் உருவாக்க முடியும்.
மனித வளத்தை இரு பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒன்று உடல் உழைப்பு மற்றொன்று சிந்தனைத் திறன். உடல் உழைப்பை வைத்து பணம் சம்பாதிப்பது மிக எளிமையான, எவரும் செய்யக்கூடிய வழி. ’மூட்டைத் தூக்கியாவது பிழைத்துக் கொள்வேன்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.