

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதே நிலை நீடித்தால், தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று ஏழை, எளிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கு நடுவே வெள்ளியின் விலையும் தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தங்கத்தைவிட வெள்ளியின் விலை சற்று வேகமாகவே அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை கடந்த 6 மாதத்தில் 27% ஒரு மாதத்தில் 9% உயர்ந்த நிலையில், வெள்ளி விலை முறையே 57%, 15% உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை சனிக்கிழமை 48 டாலரை எட்டியது. சென்னையில் 1 கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை உயர்வது ஏன் சற்று விரிவாக பார்ப்போம்.