

சம்பள உயர்வுக்கு டிசிஎஸ் நிபந்தனை: கரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு, ஐ.டி.ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அலுவலகம் திறக்கப்பட்டாலும் வாரத்தில் சில நாட்கள் வீட்டிலிருந்து அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான (ஐ.டி.) டிசிஎஸ், வாரத்தின் அனைத்து நாட்களும் அலுவலகம் வந்து பணிபுரிந்தால் மட்டுமே, சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படிப்பை முடித்துவிட்டு, ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட சம்பளத்துடன் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும் என டிசிஎஸ் அறிவித்துள்ளது. மேலும், ஊழியர்கள் அவரவர்களின் அலுவலகங் களுக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்றும், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அலுவலகங்களை தேர்வு செய்ய முடியாது என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.