

1918 ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை வாழ்ந்த சாம் வால்டன் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர். புகழ்பெற்ற விற்பனை நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் இவரே. 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வால்மார்ட் நிறுவனம் படிப்படியாக பரந்துவிரிந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிறுவனமாக உயர்ந்தது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் மிகச்சிறந்த நிறுவனமாக இது விளங்கியது. இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நூறு நபர்களுக்கான டைம்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
# உங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்துங்கள். அவ்வாறு செய்தால், அவர்கள் திரும்ப திரும்ப உங்களிடம் வருவார்கள்.
# உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுங்கள். உங்கள் தோல்விகளில் சில நகைச்சுவைகளைக் கண்டறியுங்கள்.
# நீங்கள் உங்கள் வேலையை நேசித்தால், ஒவ்வொரு நாளும் உங்களால் செய்யமுடிந்த சிறந்ததை செய்ய முயற்சிப்பீர்கள்.
# உங்கள் போட்டியை விட உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
# பணக்காரர்களைப் போலவே வாங்குவதற்கான வாய்ப்பினை சாதாரண மக்களுக்கும் அளியுங்கள்.
# உங்கள் பணியாளர்கள் நிறுவனத்திற்காக செய்யும் அனைத்தையும் பாராட்டுங்கள்.
# உங்கள் பணியாளர்கள் நிறுவனத்திற்காக செய்யும் அனைத்தையும் பாராட்டுங்கள்.
# அனைவரும் ஒரே வழியில் செயல்படுகிறார்கள் என்றால், சரியாக அதற்கு எதிர் திசையில் செல்வதன் மூலமாக உங்களுக்கான சிறந்ததைக் கண்டறிய நல்ல வாய்ப்பு உள்ளது.
# உயர்ந்த எதிர்பார்ப்புகளே அனைத்திற்கு மான திறவுகோலாக உள்ளது.
# நீங்கள் நிறைய தவறுகளைச் செய்யலாம், திறமையாகச் செயல்பட்டால் அவற்றை மீட்டெடுக்கலாம்.
# ஒரே ஒரு முதலாளிதான் உள்ளார், அவர் வாடிக்கையாளர்.
# நீங்கள் எதிர்பார்த்திருந்தால், சிறந்த யோசனைகள் எல்லா இடங்களிலிருந்தும் வரும்.
# பெருமை தேடும் ஒரு நபர் அதிகமாக எதையும் சாதிப்பதில்லை.