வணிக வீதி
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் திடநிலை லித்தியம் பேட்டரி: ‘இன்வென்டஸ்’ ஸ்டார்ட்-அப் நிறுவன சிஇஓ டாக்டர் எஸ்.ஆர்.எஸ்.பிரபாகரன் பேட்டி
வெளிநாடு உட்பட பல்வோறு முன்னணி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குநர் என 35 ஆண்டுகள் பணியாற்றியவர் டாக்டர் எஸ்.ஆர்.எஸ்.பிரபாகரன். இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பி.எச்டி. பட்டம் பெற்றுள்ளார். குறிப்பாக, 1987-ம் ஆண்டில் முதல் திட நிலை லித்தியம் (SOLID STATE LITHIUM) பேட்டரிகளுக்கான எலக்ட்ரோலைட் பற்றிதான் ஆய்வு செய்துள்ளார்.
கை நிறைய சம்பளம், உயர்ந்த பதவி இருந்தாலும், நாட்டுக்கு பயன்படக்கூடிய திட நிலை பேட்டரிகளை தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றியது. அதற்கான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு, டாக்டர் சிலுவை மைக்கேல் மற்றும் செசில் லாசரஸ் ஆகியோருடன் இணைந்து ‘இன்வென்டஸ் பேட்டரி எனர்ஜி டெக்னாலஜிஸ்’ ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார்.
